Saturday, June 27
Shadow

மே 17ல் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படம் ரிலீஸ்

நடிகர் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வரும் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கிய மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.

ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலருடன் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்க, படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைந்து, ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக, படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு, யு சான்றிதழும் பெற்று விட்டது. இன்று படத்துக்கான டீசர் வெளியிடப்படுவதோடு, வரும் 17ல் படத்தின் ரிலீஸ் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.