
ஜெயலலிதாவாக நடிக்க உள்ள நடிக்க கங்கனா, இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் விஜய் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்க்காக கங்கனாவுக்காக தமிழ் மொழியை கற்று கொள்ள சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் வர தெரிவித்தார்.
இயக்குனர் விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது சிறு வயதில் இருந்து எப்படி அதிகாரம் மிக்க பதவிக்கு வந்தார் என்பதை விளக்கும் வகையில் படமாக்க உள்ளார்.
இந்த படத்தில் கங்கனா, தவிர மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்த விஜய், சாய் பல்லவி சசிகலா வேடத்தில் நடிப்பதாக வெளியான் தகவலை மறுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிராகஷின் நண்பரான இயக்குனர் விஜய் இருப்பதால், ஜிவி பிராகஷின் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளனர். கேமரா பணிகளை நிரவ்ஷா ஏற்றுள்ளார்.
விபரி மீடியா தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜேந்திர பிரசாத் இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெயலலலிதாவாக நடிக்கும் கங்கனாவுக்கு மேக்கப் செய்ய வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
