
டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இந்த படம் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி பெற்றதற்கு டாக்டர் ஐசரி கணேசன் சாரே முக்கிய காரணம். படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். எனக்கும் அவர் லிமிட்டெட் எடிசன் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இத்போன்று பல நல்ல விஷயங்களை அவர் வெளிப்படையாக தெரிவிக்காமல் செய்பவர். இந்த படத்தை பற்றி எழுந்த பல்வேறு சர்ச்சைகளையும் தாண்டி இந்த படம் வெற்றி பெற உதவிய பத்திரிக்கை, மீடியா அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் ‘தனி ஒருவன்’ படத்தின் தமிழக வசூலை முறியடிக்கும் என்று ஏற்கனவே ஹப்பாப் தமிழா கணித்திருந்தார். எனது அடுத்த படத்திலும் இவரே இசையமைக்க வேண்டும் என்று விரும்புகிறன். தற்போது இயக்குனர் பிரதிப், தனக்கென ஒரு நேற்வோற்கை உருவாக்கி சிறந்த வெற்றி படங்களை தயாரித்து வருகிறது. புதிய முயற்சியாக இந்த படத்தில் நான் நடித்திருந்த போதும், படத்தை வெற்றி அடைய செய்த முக்கிய தூணாக இருந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேசன், தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ 150 ஆண்டுகளை கடந்து பணித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கோமாளி படத்தை வெற்றி படமாக தயாரித்து உள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த படத்தை தடையின்றி முடிக்க உதவிய சக்தி பிலிம் பெக்டரியின் பி சக்திவேலனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்கேஜி மற்றும் கோமாளி வெற்றியயை அடுத்து பாப்பி படத்தில் மீண்டு இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த படம் வரும் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயம் ரவி யை வைத்து கோமாளி 2 பாகம் உருவாகுவதற்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்குமாறு இயக்குனர் பிரதிப் ரங்கநாதனிடம் கேட்டுள்ளோன். கோமாளி இரண்டாம் பாகம் ஒரு ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டிலோ கண்டிப்பாக வெளி வரும். இந்த படத்தின் கதைக்காக பணியாற்றி வருகிறோம். இத்துடன் புதிய படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற உள்ளோம் என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி பி சக்தி வேலன் தெரிவிக்கையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அண்மையில் தயாரித்த படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது. இவை கமர்சியல் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஐசரி கணேசன் சாரின் அனுபவமே காரணம். ஒவ்வொரு படத்தை தயாரித்து வெளியிடுவதும் சாதாரண விஷயம் இல்லை. அண்மையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருணின் நடிப்பில் வெளியான பெயரிடப்படாத படத்தின் டீசரைபார்த்தோம். லவ் மற்றும் சைகோ திரில்லராக இருந்து வுரம் இந்த் படத்தில் ந்டித்துல்லத்தான் மூலம் வருண் சிறந்த ஆக்ஷன் ஹீரோ வாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
சினிமாட்டோகிராப்பர் ரிச்சர்ட் எம் நாதன் பேசுகையில், கடவுள் அருளால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மேலும் படத்தின் வெற்றிக்கு ஐசரி கணேசன் சார், அஸ்வின் மற்றும் பலர் இணைந்த குழுவின் உழைப்பே காரணம். இவர்களது உழைப்பே படத்திற்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றார்.
எடிட்டர் பிரதீப் இ ராகவ் பேசுகையில், பிரதிப் ரங்கநாதன் சிறப்பான படத்தை கொடுத்துள்ளார். இதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். இந்த உழைப்பே படம் வெற்றி அடைய முழு காரணமாகும். ஜெயம் ரவி அண்ணா உடன் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். ஹிபாப் ஆதி இசை ஏஆர் ரஹ்மான் இசை போன்றே சிறப்பாக அமைந்திருந்தது. ஆடியோ சார்டில் இன்னும் இந்த படத்தின் பாடல்கள் முன்னிலை பெற்றுள்ளது என்றார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், இந்த படத்திற்காக முதல் முறையாக பிரதீப் ஸ்கிர்ப்ட் எழுதியுள்ளார். இதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். இதற்கிடையே அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தனது பணிகளை சிறப்பாகவும், தெளிவாகவும் செய்யக்கூடியவர். அவரது நேர்த்தியான பணிகள் இந்த படம் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளது என்றார்.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், மீண்டும் மீண்டும் சொல்வதாக இருந்தாலும், இயக்குனர் ஐசரி கணேசன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை நான் நிறுத்த மாட்டேன். இந்த படத்திற்காக ஜெயம் ரவி சிறந்த சப்போர்ட்டை கொடுத்துள்ளார். யோகி பாபு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி காமடியில் கலக்கியதும் படத்தின் வெற்றிக்கு உதவியது இந்த படத்தில் என்னுடன் பணியாற்றி அனைவரும் நன்றி என்றார்.
