

சினிமாவில் பல மெலடி ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர்.
அது சரி.. இந்த சைந்தவியின் இசை வாழ்க்கை, எப்போது, எப்படி ஆரம்பித்தது?
*சைந்தவி பதில்* ஐந்து வயது இருக்கும்போது, ஒரு கோயிலில் நான் பாட ஆரம்பித்தேன். பஜனைகளில் கேட்ட பாடல்களைப் பாட வேண்டும் எனத் திடீரென ஆசை பிறந்தது. அங்கு நடந்து கொண்டிருந்த ஆன்மிக உரைக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த மைக்கை, நான் பாடுவதற்காக கொடுக்கும்வரை, அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தேன். அவர்களுக்கு மைக்கைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. அப்படித்தான் நான் முதன்முதலில் பாட ஆரம்பித்தேன். நான் நன்றாகப் பாடியதால், தொடர்ந்து வந்த நாட்களில் நடந்த பஜனைகளில், ஒரே ஒரு பாடல் மட்டும் பாட வாய்ப்பளித்தனர். ஆரம்ப நாட்களில், வெறும் பஜனைப் பாடல்களும், கர்னாடக இசைப் பாடல்கள் மட்டுமே பாடி வந்தேன். அதன்பின் மெதுவாக மேடைக் கச்சேரிகளிலும் பாட ஆரம்பித்தேன். குழந்தைகள் மட்டுமே பங்குபெறும் ஒரு இசைக்குழுவில் தொடர்ந்து பாடினேன். திரைப்படங்களுக்காக பிண்ணனிப் பாடும் குழந்தைகள் குழுவில் பாட ஆரம்பித்து, அப்படியே பிண்ணனிப் பாடகியாகவும் மாறினேன்.
திருப்புமுனையாக அமைந்த பாடல் வாய்ப்பு எது?
*சைந்தவி ஆன்சர்* :
அந்நியன் படத்தில் பாடிய ‘அண்டங்காக்கா’ பாடல்தான், நான் பாடி வெளியான முதல் பாடல். அது மிகப்பெரிய வெற்றி பெற்று, தொடர்ந்து துள்ளலான பாடல்கள் பாட எனக்கு வாய்ப்புகள் வந்தன. பிறகு, தெய்வத்திருமகள் படத்தில் வந்த ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடல் எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

ஜி வி பிரகாஷூடன் மேரேஜ் ஆனது பத்தி?
*மிசஸ் ஜிவி பதில்* நானும் ஜிவியும் ஒரே பள்ளியில் படித்தோம். நாங்கள் இருவருமே, பள்ளியின் இசைக்குழுவில் இருந்தோம். இணைந்து, பலப் போட்டி களில் பங்கேற்றுள்ளோம். முதலில் நல்ல நண்பர்களானோம். தொடர்ந்து, ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தோம். அப்புறமா நிறைய பேசி கன்வின்ஸ் ஆகி மேரேஜ் பண்ணிக்கிட்டோம்
