Wednesday, October 28
Shadow

மீண்டும் இணையும் 1௦௦ கோடி வெற்றி கூட்டணி விஜய் சமந்தா மற்றும் அட்லி

விஜய்யின் ராசி நாயகி சமந்தா என்று சொல்லலாம் ஏன் என்றால் விஜய் சமந்தா ஜோடி நடித்த இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் இரண்டும் வசூலில் 1௦௦ கோடி பட்டியலில் சேர்ந்த படம் அந்த வரிசையில் மீண்டும் இருவரும் இணைகிறார்கள். என்று பேசபடுகிறது. விஜய் மற்றும் அட்லி கூட்டனியில் தான் மீண்டும் இணைகிறார். அப்பா இந்த படமும் மிக பெரிய வெற்றி இதும் 1௦௦ கோடி வெற்றி கூட்டணி

’கத்தி’, ‘தெறி’ ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் ஒரு முறை விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யும் இயக்குனர் அட்லியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருக்கிறாகள். விஜய்யின் 61-ஆவது படமான இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’யில் கதாநாயகியாக நடித்த சமந்தாவையே விஜய்யின் 61-ஆவது படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைக்க அட்லி தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமந்தாவும் சமீபத்தில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் விஜய்யுடன் மீண்டும் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சமந்தா மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply