Tuesday, April 23
Shadow

சிறந்த படங்களை தயாரிக்கும் ஈராஸ் தயாரிப்பில் நயன்தாரா!

இன்றைய தமிழ் சினிமாவின் டாக் ஆப தி டவுன் என்றால் அது நயன்தாரா தான் அந்த அளவுக்கு மிக முக்கியம் வாய்ந்த நடிகையாகிவிட்டார் நயன்தாரா முதல் லேடி சூப்பர் ஸ்டார் படம் பெற்றவர் புதுவித கதைகள் சிறந்த கதாபாத்திரம் இதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர். அதே போல ஈராஸ் நிறுவனம் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து படம் எடுப்பவர்கள் ஹிந்தியில் மிக சிறந்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம் தமிழில் சமீபகாலமாக தமிழில் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். இவர்களும் நயன்தாராவும் இணையும் முதல் படம்

‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா தற்போது தனது கவுன்டவுனில் 4வது படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆம்… ஏற்கெனவே அறம், டோரா, கொலையுதிர் காலம் என நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள 3 படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பரத் கிருஷ்ணமாச்சாரி இப்படத்தை இயக்குகிறார். செழியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு சதீஷ்குமார் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலேயே நடைபெறும் என்று தெரிகிறது. காரணம், இப்படத்தின் கதைப்படி நாயகி நயன்தாராவுக்கு பிரான்ஸ் ஜர்னலிஸ்ட் கேரக்டராம். தன் குடும்பத்தைத் தேடி பல நாடுகளுக்கு பயணம் செய்யும் நயன், இறுதியாக தமிழ்நாட்டிற்கு வருவதுபோல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Leave a Reply