
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. விஜய் இந்த படத்துக்காக தான் முறுக்கு மீசை தாடி வளர்பாதாக சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள் இதன் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் உள்ள மயிலாப்பூரில் நடக்க இருக்கிறதாம்.
இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில்தான் நடைபெறும் என ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ஒரு மாதம் முழுவதும் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
