Sunday, April 19
Shadow

கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு

ஒரு நடிகர் திரையில் தோன்றுகிறார் என்றாலே கைதட்டலும், விசில் சப்தமும் அரங்கங்களில் அதிர்வது என்பது ஹீரோக்களுக்கு மட்டும்தான். விதிவிலக்காக சில காமெடி நடிகர்களும் இந்தப் பட்டியலில் அத்திபூத்தாற் போல இடம் பெறுவதுண்டு. தமிழ் சினிமாவில் லேட்டஸ்டாக அந்த அந்தஸ்தை எட்டி இருப்பவர் ‘யோகி’ பாபு. எனக்கே விபூதி அடிச்சிட்டேல்லே? என்று அப்பாவியாக ‘காக்கா முட்டை’யில் அவர் கேட்கும்போது வெடித்துச் சிரிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஆர்ட்டிஸ்ட் இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம்.

கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. தினம் தினம் யாராவது இவரிடம் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். காமெடி வேடங்கள்தான் கிடைக்கிறது என்றாலும், இந்த புத்தாண்டில் இருந்து வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறார். இடைவிடாது படப்பிடிப்புகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அவரை, ஒரு சிறு இடைவெளியில் பிடித்தோம்.

விஜய் வெச்சு ‘புதிய கீதை’ எடுத்தாரே டைரக்டர் கே.பி.ஜெகந்நாத் அவரோட டைரக்‌ஷனில் வித்தியாசமான ரொமான்ஸ் ரோல். படத்தோட பேரை கேட்டாலே சிரிப்பு வரும். ‘என் ஆளோட செருப்ப காணோம்’. இதுலே ‘கயல்’ ஆனந்தியை ஒன்சைடா லவ் பண்ணுற கேரக்டரில் நடிக்கிறார் . படம் நெடுக வருவேன். டிஃபரன்ட் டிஃபரன்டா டாக்டிக்ஸ் பண்ணி, ஆனந்தியை மடக்க ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பேன். ஒவ்வொரு வாட்டியும் பல்பு வெடிச்சிடும். இதுவரைக்கும் நான் பண்ணின கேரக்டர்களில் இது ரொம்ப புதுசு

Leave a Reply