Friday, April 12
Shadow

விஜய் 62 லைக்கா தயாரிப்பில் கூட்டணி அமைக்கும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ்

பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `பைரவா’ படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. `துப்பாக்கி’, `புலி’ படத்தை தொடர்ந்து காமெடியனாக சத்யன் இணைந்துள்ளார்.

அட்லி படத்திற்கு பின்னர், விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், கத்தி படத்தை தயாரித்த லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் `விஜய் 62′ படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக `விஜய் 62′ படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

முருகதாஸ் – விஜய் கூட்டணி `துப்பாக்கி’, `கத்தி’ உள்ளிட்ட இரு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply