
காணாமல் போன ஒரு பொருள்… பின்னணியில் இருக்கும் மர்மம்! ‘ஃபேமிலி பாய்’ டீசர் வெளியீடு!
நடிகர் சூர்யா அறிமுகப்படுத்திய இயக்குநர் மித்துன் மாணிக்கம் நடித்து இயக்கியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம், குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ளது.
‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மித்துன் மாணிக்கம், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஜிஜேந்திரன்.வி கவனிக்க, கலை இயக்குநராக சி.கே. முஜிபுர் ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.
மெக்கானிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்.எல்.பி. நிறுவனத்தின் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஒரு நாள் பயணம்… எதிர்பாராத திருப்பங்கள்!
வெளியாகியுள்ள டீசர், படத்தின் கதைக்களம் குறித்த சுவாரசியமான அறிமுகத்தை வழங்குகிறது. சிலப்பதிகாரம் தொடங்கி சிங்காரச் சென்னை வரை எனத் தொடங்கும் வசனத்துடன், ஒரு பொருள் தொலைந்துபோகும்போது அதை இழந்தவருக்குத்தான் அதன் வலி புரியும் என்ற கருத்தை முன்வைக்கிறது.
2020-ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி கதாநாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்களும், அதில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
டீசரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை, காட்சியமைப்பு மற்றும் பரபரப்பான கதை சொல்லும் பாணி ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து, இப்படம் ரசிகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
A Missing Object, a Mysterious Journey and Unexpected Twists! ‘Family Boy’ Teaser Out Now
The teaser of Family Boy, written and directed by Mithun Manickam, who made his acting debut with the Suriya-backed Tamil film Raame Aandalum Raavane Aandalum, has been released, offering a glimpse into an intriguing family drama packed with action, suspense and unexpected twists.
Featuring Mithun Manickam in the lead role, Family Boy explores an unusual chain of events set against the backdrop of a family. Blending emotional elements with action and thriller moments, the film promises an engaging cinematic experience.
The film features an ensemble cast comprising Mithun Manickam, M. Sukumar, Saran Sudhakaran, Anugraha S. Nambiar, Nikhila Shankar, Anita Sampath, ‘Pasanga’ Sivakumar, Sivam, Arul Doss and P. L. Thenappan, among others.
Karthik K Kathiravan has handled the cinematography, while Nirmal JP has composed the music. Jijendran V is in charge of editing, and C. K. Mujibur Rahman has taken care of the art direction.
Produced by Mithun Manickam under the banner of Mechanic Pictures, the film is co-produced by Muhammad Gani Faizal and Dr. K. Arun Arumugam under Millennials Movie Production LLP. Balloon Pictures will distribute the film across Tamil Nadu.
A One-Day Search That Unfolds Into an Unexpected Adventure
The teaser opens with a reference to the journey from Silappathikaram to Singara Chennai, followed by the thought-provoking line that only the person who loses something truly understands the pain of losing it.
Inspired by a real-life incident that took place in a family in 2020, the film revolves around the protagonist’s one-day journey in search of a missing object. The teaser offers glimpses of the interesting incidents and unforeseen twists that unfold during this search, building curiosity about the story.
The background score, visual composition and engaging presentation add to the intrigue, making the teaser an interesting introduction to the film’s world.
With its blend of family drama, action and thriller elements, Family Boy is gearing up for a worldwide theatrical release on December 11. Following the teaser launch, expectations are building around Mithun Manickam’s latest directorial venture.
Watch the teaser:
