ஹாலிவுட்டில் அதிர வைக்கும் திகில் வேட்டை! ‘கிளேஃபேஸ்’ திரைப்படம் அக்டோபர் 23-ல் இந்தியாவில் வெளியீடு!
ஹாலிவுட்டில் அதிர வைக்கும் திகில் வேட்டை! ‘கிளேஃபேஸ்’ திரைப்படம் அக்டோபர் 23-ல் இந்தியாவில் வெளியீடு!
கோதமின் தெருக்களில் தொடங்கி ஹாலிவுட்டின் உச்சம் வரை… உருக்குலைந்த வாழ்க்கையும் பழிவாங்கும் வெறியும் இணையும் மர்மத் திகில் கதை!
டிசி காமிக்ஸ் உலகில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ‘கிளேஃபேஸ்’, தற்போது திரையில் ஒரு புதிய திகில் அனுபவமாக உருவெடுத்துள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், மனிதனின் தோற்றம், மனநிலை மற்றும் பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திகில் திரில்லர் திரைப்படமாகத் தயாராகியுள்ளது.
கோதம் நகரின் தெருக்களில் சாதாரணச் சிறுவனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மேட் ஹேகன், கடின உழைப்பால் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்கிறார். வெற்றியின் உச்சத்தில் இருக்கும் அவரது வாழ்க்கை, உள்ளூர் குற்ற...



