Wednesday, October 28
Shadow

காந்தாரா பாணியில் மற்றொரு தெய்வீக மர்மப் படம்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்!

காந்தாரா பாணியில் மற்றொரு தெய்வீக மர்மப் படம்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்!

தெய்வீகம், ஆன்மிகம், மர்மம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள புதிய பான் இந்திய திரைப்படம் ‘ஆதி ருத்ரா’. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தைப் பெரிய அளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த காலத்தின் பின்னணியில் தெய்வீக மர்மம்!

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், மக்களின் நம்பிக்கைகள், தெய்வீக மர்மங்கள் ஆகியவற்றுடன் பரபரப்பான திருப்பங்களும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களும் கதையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெய்வீக நம்பிக்கைகளையும் மர்மங்களையும் மையமாகக் கொண்ட கதைக்களம் என்பதால், ‘ஆதி ருத்ரா’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும்போது, இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும்.

 

Aadi Rudra: Aadhi Sai Kumar’s Pan-India Divine Mystery Thriller Set to Begin Filming in January

Starring Aadhi Sai Kumar, the film will be made in five languages and explores a mysterious world of spirituality, faith and the divine.

A new pan-India film titled Aadi Rudra, blending spirituality, divine elements and mystery, is gearing up for production. Featuring Aadhi Sai Kumar in the lead role, the film is planned as a grand cinematic venture across five languages.

The film marks the third production from Trishul Entertainments and is being produced by Prashanth G Rudrappa, who has previously backed films such as Dandupalyam and Krishna Pranaya Sakhi. Written and directed by Navarasan, Aadi Rudra is being planned on an ambitious scale.

A Mystery Set Between the 1960s and 1990s

Set against the backdrop of the period between 1960 and 1990, the film revolves around divine mysteries, spiritual beliefs and faith. The narrative is expected to combine suspense, intriguing twists and emotionally engaging moments, offering audiences a distinct theatrical experience.

The makers have kept the film’s central storyline and key twists under wraps, with further details expected to be revealed in the coming months.

Music by B. Ajaneesh Loknath

Music for Aadi Rudra will be composed by B. Ajaneesh Loknath, who has gained recognition for his work in films such as Kantara, Vikrant Rona, Mangalavaaram and the Tamil film Maharaja. A.J. Shetty will handle the cinematography.

The film is planned to be made in Telugu, Kannada, Tamil, Hindi and Malayalam, expanding its reach to audiences across India.

Filming to Begin in January

The shooting of Aadi Rudra is scheduled to commence in January. The makers are expected to announce the remaining cast members, additional technical crew and further details about the project in the coming days.

With its period setting and a storyline centred on divine mysteries and spiritual beliefs, Aadi Rudra aims to offer audiences a different cinematic experience. Expectations are likely to grow as more details about the film emerge.

Aadi Rudra brings together divine mystery, spirituality and suspense in a five-language pan-India venture.