
இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆனந்த் பாபு 1985 டிசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
தங்கைக்கோர் கீதம், கடமை, புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன், பாடும் வானம்பாடி, வெற்றிக்கனி, உதய கீதம், பார்த்த ஞாபகம் இல்லையோ, விஸ்வநாதன் வேலை வேண்டும், இளமை, பந்தம், அர்த்தமுள்ள ஆசைகள், மௌனம் கலைகிறது, கடற்கரை தாகம், தாயா தாரமா, புரியாத புதிர், புது வசந்தம், எங்கள் சுவாமி அய்யப்பன், எதிர் காற்று, புதுப்புது ராகங்கள், சிகரம், சேரன் பாண்டியன், இதய ஊஞ்சல், எம்ஜிஆர் நகரில், புத்தம் புது பயணம், அன்பு சங்கிலி, ஈஸ்வரி, ஒன்னும் தெரியாத பாப்பா, தாயம்மா, வானமே எல்லை, ரெண்டு பொண்டாட்டி காவல்காரன், காவலுக்கு கண்ணில்லை, நான் பேச நினைப்பதெல்லாம், சூரியன் சந்திரன், என் இதய ராணி, மணிரத்னம், பட்டுக்கோட்டை பெரியப்பா, வாட்ச்மேன் வடிவேலு, ரோஜா மலரே, சந்தோசம், சேரன் சோழன் பாண்டியன், அன்புள்ள காதலுக்கு, ஆதவன், மதுரை சம்பவம், ஒளியும் ஒலியும், ஏதோ செய்தாய் என்னை
