
கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
கே எஸ் ரவிகுமார் காமெடி, நாடகம் மற்றும் த்ரில்லர் போன்ற எண்ணற்ற திரைப்படங்களை இயக்கியவர். அவரது படம் ( 2008 ) தசாவதாரம் முதல் நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 16 மில்லியன் டாலர்கள் மொத்தமாக வருமானம் ஈட்டியது. மற்றும் இப்படம் மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றானது.
இவர் நடித்த திரைப்படங்கள்
என் ஆளோட செருப்பை காணோம், ரெமோ, றெக்க, தங்க மகன், சிகரம் தொடு, ஆடாம ஜெய்ச்சோமடா, ஒன்பதுல குரு,மன்மதன் அம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா, ஜக்குபாய், ஆதவன், தொட்டால் பூ மலரும், வரலாறு, சரவணா, மாயாவி, அருள், பஞ்சதந்திரம், மின்சார கண்ணா
இவர் இயக்கிய படங்கள்
முடிஞ்சா இவன புடி, லிங்கா, ஆதவன், மன்மதன் அம்பு, ஜக்குபாய், தசாவதாரம், வரலாறு, சரவணா, வில்லன், பஞ்சதந்திரம், தெனாலி, மின்சார கண்ணா, அவ்வை சண்முகி இன்னும் பல படங்கள்
