Thursday, October 29
Shadow

நடிகை மனிஷா கொய்ராலா பிறந்த தினம் இன்று அவரை பற்றிய சில வரிகள்

நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.

தமிழில் முதல்வன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப் பவர் மனிஷா கொய்ராலா. இவர் சில வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார்.

நோய் பாதிப்பிலிருந்தபோது நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவர் சிகிச்சைக்கு பிறகு குணமாகி மீண்டும் நடிக்க வந்த மனிஷா தமிழில் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்