Tuesday, April 21
Shadow

நடிகர் பாபி சிம்ஹா பிறந்த தினம் இன்று

பாபி சிம்ஹா என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா, நேரம் படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.

இவர் நடித்த திரைப்படங்கள்

காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, நான் ராஜாவாகப் போகிறேன், சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், இஞ்சி இடுப்பழகி, உறுமீன், பெங்களூர் நாட்கள், அவியல்,ரன், கோ 2