Saturday, April 18
Shadow

நடிகர் தனுஷ் பிறந்த தின பதிவு

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர், 2004-ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

நடித்த படங்கள்

மாரியப்பன் – 2020 ( தமிழ் )
பக்கிரி – 2019 ( தமிழ் )
அசுரன் – 2019 ( தமிழ் )
வட சென்னை – 2018 ( தமிழ் )
மாரி 2 – 2018 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி 2 – 2017 ( தமிழ் )
ப.பாண்டி – 2017 ( தமிழ் )
கொடி – 2016 ( தமிழ் )
தொடரி – 2016 ( தமிழ் )
அனேகன் – 2015 ( தமிழ் )
காக்கா முட்டை – 2015 ( தமிழ் )
வை ராஜா வை – 2015 ( தமிழ் )
தங்க மகன் – 2015 ( தமிழ் )
மாரி – 2015 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி – 2014 ( தமிழ் )
நய்யாண்டி – 2013 ( தமிழ் )
மரியான் – 2013 ( தமிழ் )
அம்பிகாபதி – 2013 ( தமிழ் )
எதிர்நீச்சல் – 2013 ( தமிழ் )
3 – 2012 ( தமிழ் )
மயக்கம் என்ன – 2011 ( தமிழ் )
வேங்கை – 2011 ( தமிழ் )
மாப்பிள்ளை – 2011 ( தமிழ் )
சீடன் – 2011 ( தமிழ் )
ஆடுகளம் – 2011 ( தமிழ் )
குட்டி – 2010 ( தமிழ் )
படிக்காதவன் – 2010 ( தமிழ் )
உத்தமப் புத்திரன் – 2010 ( தமிழ் )
யாரடி நீ மோகினி – 2008 ( தமிழ் )
பொல்லாதவன் – 2007 ( தமிழ் )
பரட்டை என்கிற அழகு சுந்தரம் – 2007 ( தமிழ் )
புதுப்பேட்டை – 2006 ( தமிழ் )
திருவிளையாடல் ஆரம்பம் – 2006 ( தமிழ் )
அது ஒரு கனா காலம் – 2005 ( தமிழ் )
தேவதையை கண்டேன் – 2005 ( தமிழ் )
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் – 2004 ( தமிழ் )
சுள்ளான் – 2004 ( தமிழ் )
ட்ரீம்ஸ் – 2004 ( தமிழ் )
திருடா திருடி – 2003 ( தமிழ் )
காதல் கொண்டேன் – 2003 ( தமிழ் )
துள்ளுவதோ இளமை – 2002 ( தமிழ் )


தயாரித்த படங்கள்

மாரியப்பன் – 2020 ( தமிழ் )
காலா – 2018 ( தமிழ் )
மாரி 2 – 2018 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி 2 – 2017 ( தமிழ் )
சினிமா வீரன் – 2017 ( தமிழ் )
ப.பாண்டி – 2017 ( தமிழ் )
விசாரணை – 2016 ( தமிழ் )
அம்மா கணக்கு – 2016 ( தமிழ் )
நானும் ரௌடி தான் – 2015 ( தமிழ் )
தங்க மகன் – 2015 ( தமிழ் )
காக்கா முட்டை – 2015 ( தமிழ் )
காக்கி சட்டை – 2015 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி – 2014 ( தமிழ் )
எதிர்நீச்சல் – 2013 ( தமிழ் )
பாடலாசிரியர்
மாரி 2 – 2018 ( தமிழ் )
தங்க மகன் – 2015 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி – 2014 ( தமிழ் )
மரியான் – 2013 ( தமிழ் )
3 – 2012 ( தமிழ் )
மயக்கம் என்ன – 2011 ( தமிழ் )

பாடல் பாடிய படங்கள்

மாரி 2 – 2018 ( தமிழ் )
யாக்கை – 2017 ( தமிழ் )
நெஞ்சம் மறப்பதில்லை – 2017 ( தமிழ் )
கொடி – 2016 ( தமிழ் )
அனேகன் – 2015 ( தமிழ் )
தங்க மகன் – 2015 ( தமிழ் )
வேலையில்லா பட்டதாரி – 2014 ( தமிழ் )
எதிர்நீச்சல் – 2013 ( தமிழ் )
இரண்டாம் உலகம் – 2013 ( தமிழ் )
நய்யாண்டி – 2013 ( தமிழ் )
3 – 2012 ( தமிழ் )
மயக்கம் என்ன – 2011 ( தமிழ் )
சீடன் – 2011 ( தமிழ் )
ஆயிரத்தில் ஒருவன் – 2010 ( தமிழ் )
புதுப்பேட்டை – 2006 ( தமிழ் )
தேவதையை கண்டேன் – 2005 ( தமிழ் )
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் – 2004 ( தமிழ் )

இயக்கிய படங்கள்

ப.பாண்டி – 2017 ( தமிழ் )