கவின் ராஜ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்.
ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தினால் முதலில் நன்பர்களின் மூலமாகவே குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். முறையாக நடிப்பைக் கள்ளுக்கொள்ள, கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார்.
பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி நடிகராக தன் வாழ்வைத் துவக்கினார் இவர் கனாகாணும் காலங்கள் தொடரில் சிவா என்னும் பாத்திரத்தில் நடித்தார், பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் முருகன் மற்றும் சரவணன் மீனாட்சி பகுதி 2 இல் வேட்டையனாக நடித்தார். இவர் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். இவர் தற்போது ஸ்டார் விஜயில் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்று ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ளார். இவர் விரைவில் விக்ரம் பிரபுவின் திரைப்படமான முடி சூடா மன்னன் திரைப்படத்தில் இணை நடிகராக உள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்: பீட்சா, இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன், நட்புன்னா என்னான்னு தெரியுமா