Tuesday, April 21
Shadow

நடிகர் மனோஜ் பாரதிராஜா பிறந்த தினம் இன்று

இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார். இவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்தார். இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.

இவர் நடித்த திரைப்படங்கள்

தாஜ்மகால், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், சாதுரியன், அன்னக்கொடி, வாய்மை, 13