Wednesday, October 28
Shadow

நடிகர் மீசை முருகேசன் பிறந்த தினம்

ஐ. எஸ். முருகேசன் தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; அபூர்வ தாளவாத்தியங்கள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண்பாவம், பூவே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்

தமது 85வது வயதில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர்.