
ரமேஷ் அரவிந்த் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர் பெரும்பாலும் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம், பாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். ரமேஷ் சதிலீலாவதி, டூயட், அமெரிக்கா, நம்மூர மந்த்ரா ஹூவே, உல்டா பல்டா, ஹூமளே மற்றும் அம்ருத வர்ஷினி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
காரைக்குடி நாராயணன் எழுதிய “மாதச் சம்பளம்” என்ற வெற்றி நாடகம், இப்போது கன்னடத்தில் திரைப்படமாகிறது. அதை அவரே இயக்குகிறார்.’ சதிலீலாவதி படத்தில் நடித்த ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 27 படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர், காரைக்குடி நாராயணன். 7 படங்களை டைரக்ட் செய்தார். அவற்றில் 5 படங்கள் சொந்தமாக தயாரித்தவை.
படத் தொழிலில் தேக்கம் ஏற்பட்டபோது, இவர் சும்மா இருக்கவில்லை. நிறைய படித்தார்; கதைகள் எழுதினார். தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் ஆயுள் உறுப்பினரான இவர், அங்கு 72 கதைகளை பதிவு செய்து வைத்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பஞ்சதந்திரம், குட்டி, ரிதம், ஜோடி, பாட்டு வாத்தியார், சதிலீலாவதி, டூயட், தென்றல் வரும் தெரு, புதிய தென்றல், மௌனமொழி, மும்பை எக்ஸ்பிரஸ், அவ்வை சண்முகி, சதி லீலாவதி, மகராசன்
இவர் இயக்குனராக பணியாற்றிய படங்கள்
பாரிஸ் பாரிஸ், உத்தம வில்லன்
