Friday, April 17
Shadow

நடிகர் ரிஷி பிறந்த தின பதிவு

கேரளாவும் குஜராத்தும் இணைந்த கலவை ரிஷி. அப்பா மலையாளி, அம்மா குஜராத்தி. ப்ளஸ்டூ படித்து முடித்ததும் எஞ்ஜினியரிங் படிக்கவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். ஆனால் அதற்கு கட்டுப்படாமல் லயோலாவில் விஸ்காம் படித்திருக்கிறார். 19 வயதில் ரிஷி இயக்கிய சன்ஷைன் பாய்ஸ் படம் பல பாராட்டுகளை பெற்றுள்ளதாம்.

விஸ்காம் படிக்கும்போது மீடியா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. விஜய் டி.வி.யில் வெளியான இது ஒரு காதல் கதை தொடரில் நடித்த ரிஷி, தெலுங்கு தொடர்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் வேலை பார்த்த அனுபவம், டீலா நோ டீலா நிகழ்ச்சியாக தொடர்ந்தது. ரிஷிக்கு மிகப்பெரிய பிரேக் அது. அதைத் தொடர்ந்து வந்ததுதான் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி இது பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆக்கியுள்ளது. உள்ளிட்ட சில விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார் ரிஷி.

இவர் நடித்த படங்கள்: தொடக்கம், ஆனந்த தாண்டவம், மந்திரப்புன்னகை, பயணம், மிரட்டல்