Wednesday, October 28
Shadow

நடிகர் விஜயகுமார் பிறந்த தின பதிவு

விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.

இவர் நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்:  அக்னி நட்சத்திரம், கிழக்குச் சீமையிலே, குசேலன், சேரன் பாண்டியன், நாட்டாமை, முதல்வன், மஜா, சந்திரமுகி, சாமி, சிங்கம், அந்தி மந்தாரை, பொண்ணுக்கு தங்க மனசு, அவள் ஒரு தொடர்கதை, அழகே உன்னை ஆராதிக்கிறேன், பெரிய இடத்து மாப்பிள்ளை