
பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.

சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.
இவர் நடித்த நடித்த திரைப்படங்கள்

சண்டமாருதம், ஆம்பள, லிங்கா, சிங்கம் 2, சென்னையில் ஒரு நாள், மம்பட்டியான், ஒஸ்தி, கண்டேன், பொன்னர் சங்கர், சிங்கம், மாஞ்சா வேலு, கோவா, ஜக்குபாய், பொக்கிஷம், சொல்ல சொல்ல இனிக்கும், மலை மலை, 1977, குசேலன், கண்ணும் கண்ணும், வைத்தீஸ்வரன், ஆயுதம் செய்வோம், ‘சந்தோஷ் சுப்பிரமணியம், தாமிரபரணி, குற்றப்பத்திரிகை, தீபாவளி, குஸ்தி, தலைமகன், இளவட்டம், ஜாம்பவான், தர்மபுரி, ஆதி, குருதேவா, ராமகிருஷ்ணா, ஜி, மஜா, லண்டன், சந்திரமுகி, ஏய், வானம் வசப்படும், மானஸ்தன், குத்து, சாமி, அன்பு, பாபா, ஆல்பம், ஸ்ரீ, ஆசை ஆசையாய், துள்ளுவதோ இளமை, என் மன வானில், வில்லன், பாண்டவர் பூமி, ஆனந்தம், ஸ்டார், ஏழுமலை, குஷி, சந்தித்த வேளை, மாயி, மலபார் போலிஸ், பூவெல்லாம் கேட்டுப்பார், நீ வருவாய் என, பொண்ணு வீட்டுக்காரன், ஆனந்த பூங்காற்றே, ஜோடி. சுயம்வரம், சின்ன துரை, ஆசையில் ஒரு கடிதம், முதல்வன், தேசிய கீதம், சங்கமம், என் ஆசை ராசாவே, நட்புக்காக, ஆஹா, பாரதி கண்ணம்மா, பாஞ்சாலங்குறிச்சி, புதையல், அபிமன்யு, பெரிய தம்பி, மிஸ்டர் ரோமியோ, அந்திமந்தாரை, லவ் பேர்ட்ஸ், பூவரசன், பரம்பரை, பெரிய இடத்து மாப்பிள்ளை, சேனாதிபதி, பாட்ஷா, மாண்புமிகு மாணவன், லக்கிமேன், முத்துகாளை, பெரிய குடும்பம், ராசய்யா, தாய் மாமன், ச ரி க ம ப த, சக்திவேல், நாட்டாமை, சாது, அரண்மனை காவலன், ராஜகுமாரன், அதிரடிப்படை, அதர்மம், ரசிகன்
