Sunday, December 8
Shadow

நடிகர் விக்ரம் பிரபு பிறந்த தினம்

விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார்.  சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.
லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.
நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார். இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.

 

இவர் நடித்த திரைப்படங்கள்
கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி, சத்திரியன், நெருப்புடா குரு