Tuesday, April 21
Shadow

நடிகை ஜெயசித்ரா பிறந்த தினம் இன்று

ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா.

இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!

ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார்.

அவர் 1954-ம் ஆண்டு “ரோஜலு மாராயி” (தெலுங்கு “காலம் மாறிப்போச்சு”) படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

1955-ம் ஆண்டு “மகாவீரபீமன்” என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின்னர் “தெய்வபலம்”, “சிவகாமி” உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.

திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது “பக்தபோதனா” என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.

ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார்.

ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க “கேமரா டெஸ்ட்” எடுத்தனர்.

ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, “நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்” என்று கூறிவிட்டார் விட்டலாச்சாரியார்.

இவர் இயக்குனராக ,புதிய ராகம் என்ற படத்தை இயக்கியுள்ளார் .