
மோனல் காஜர் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவர்
இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, டெக்ஸ்டைல் துறையில் மேற்பார்வையாளர் வேலை செய்து வந்தார்.[2] இவரது யோகா ஆசிரியரின் கருத்துரைப்படி, 2011 இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த, மிர்ச்சி ராணி தேனீ அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார். பின்னர் மிஸ் குஜராத் பட்டத்தையும் வென்றார்.
இவரது முதல் திரைப்படம் வெளியாகும் முன்னர், தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட ஐந்து படங்களில் கையெழுத்திட்டார்.[5] 2012 இல் வெளிவந்த டிராகுலா எனும் மலையாள படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இவரது முதல் இரண்டு தமிழ் படங்கள் வானவராயன் வல்லவராயன்[7], சிகரம் தொடு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாயின. இவர் சிகரம் தொடு படத்தில், நடிப்பிற்காக நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்
