Wednesday, October 28
Shadow

நடிகை நீலிமா ராணி பிறந்த தினம் இன்று

இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த திரைபடங்கள்

தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், பிரியசகி, இதயத்திருடன், திமிரு, ஆணிவேர், மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், ராஜாதி ராஜா, சிலந்தி, புகைப்படம், ரசிக்கும் சீமானே, நான் மகான் அல்ல, முரண், மிதிவெடி, காதல் பாதை, மதில் மேல் பூனை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், அமளி துமளி. இருவர் உள்ளம், வாலிப ராஜா

இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

2002-2005 மெட்டி ஒலி
2003-2007 தற்காப்பு கலை தீராதா
2003-2009 கோலங்கள்
2005-2007 என் தோழி என் காதலி என் மனைவி
2008 புதுமை பெண்கள்
2009-2012 தென்றல்
2010-2012 இதயம்
2012 பவானி
2009-2013 செல்லமே
2013- மகாபாரதம்