Saturday, June 27
Shadow

நடிகை பூர்ணிதா பிறந்த தின பதிவு

பூர்ணிதா என்கின்ற கல்யாணி ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.

இவர் தன்னுடைய பெயரை “பூர்ணிதா” என்று மாற்றிக்கொண்டு மறந்தேன் மெய்மறந்தேன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 திரைப்படத்திலும், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்த பிறகு தன்னுடைய உண்மையான பெயரான “கல்யாணி” என்று மாற்றிக்கொண்டார். இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

அள்ளித்தந்த வானம், ஸ்ரீ, ரமணா, ஜெயம், மறந்தேன் மெய்மறந்தேன், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00, இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல்