
ரெஜினா கசாண்ட்ரா இவர் இந்திய நாட்டு நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
ரெஜினா இவரின் தாய் மொழி தமிழ் ஆகும். 2005ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். 2010ம் ஆண்டு சுர்யகாண்டி என்ற கன்னடம் திரைப்படத்தில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு சிவா மனசுல ஸ்ருதி என்ற என்ற திரைப்படத்துக்காக 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதை வென்றார். அதை தொடர்து 2013ம் ஆண்டு விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்
கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம்
