
சாலினி தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.
இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.
இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
அலைபாயுதே,, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும், பந்தம், பிள்ளை நிலா, விடுதலை, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா
