Friday, April 12
Shadow

விஸ்வரூபம் 2 ரிலீஸ் நேரத்தில் தகராறு செய்யும் நடிகை ரிலீஸ் கேள்விகுறி ?

பல பஞ்சாயத்து நடுவில் விஸ்வரூபம் படத்தில ஒரு சில முன்னேறற்றம் ஏற்பட்டது. தனது பிடிவாதத்தை பெருமளவு தளர்த்திக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தின், அப்படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். கமலுடன் இணைந்த வெளியிடுவாரா ? அல்லது தனித்த வெளியிடுவாரா ? என்பது இன்னும் முடிவாகாமல் நிற்கிறது.

மோடியின் கருப்பு பண அறிவிப்பு பற்றிய கருத்தை சொன்ன ஆஸ்கர் ரவிச்சந்திரன், “கமல் சாருக்கு இந்த அறிவிப்பால் ஒரு நஷ்டமும் வராது. ஏனென்றால் சின்ன சின்ன செலவுகளை கூட, காசோலையில்தான் காட்டுவார். எல்லாமே அவருக்கு வெள்ளையாக இருக்க வேண்டும். அதுதான் கமல் பாலிஸி” என்றெல்லாம் அவரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இப்போதைய நிலவரப்படி, அப்படியே விஸ்வரூபம் 2 ஐ வெளியிட்டுவிட முடியாது என்கிறார்கள். படத்தில் சில பல மாற்றங்களை செய்ய வேண்டுமாம். அதிலும் ஆன்ட்ரியா காட்சிகளை ரீஷுட் பண்ணியே ஆக வேண்டுமாம். ஆனால் ஆன்ட்ரியாவோ இனி நடிக்க மாட்டேன் என்கிறாராம். ஆன்ட்ரியாவின் காட்சியை படத்திலிருந்தே அவர் தூக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் படக்குழுவினர். பொறுத்திருந்து பார்போம்.

Leave a Reply