விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கல் தின வெளியீடாக வந்தது ‘தானா சேர்ந்த கூட்டம்’
படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலில் வரும் அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ’சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.