
சத்யஜோதி தயாரிப்பில் சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்கத்தில் வெளிவந்த ஒன்பதாம் விவேகம் இந்த படம் ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்லணும் இந்த படம் தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனத்துக்கு நஷ்டம் காரணம் அதிக பொருள் செலவில் உருவானதே காரணம்
இதனால் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தை அனுபவிக்க கூடாது என்று மீண்டும் அந்த நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணித்தருவதாக கூறிய அஜித் அதை தற்போது நிறைவேற்றுகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது. பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார். அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு”விசுவாசம்” என்று தலைப்பிட பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று
“விசுவாசம்” வெளி வரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்.
