நடிகர் அஜீத் மற்றும் டெல்லி கணேஷ் இருவரும் சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில், வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் அஜீத் உடன் நடிப்பது குறித்து பேசிய டெல்லி கணேஷ், அஜீத் நடிகர் அல்ல, அவர் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னை பொறுத்தவரை நடிகர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக இருந்து வருகிறார். நான் அவரிடம் நீங்கள் நடிகர் அல்ல, நீங்கள் நல்ல மனிதர் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் நடிகராக மாறலாம். ஆனால் எல்லோராலும் நல்ல மனிதராக மாற முடியாது. அவர் அமைதியா, எந்த பாகுபாடுமின்றி அனைவரிடமும் பேசுவார்.
அவருக்கு என்று கேரவன் இருக்கிறது ஆனாலும் அதை அவர் பயன்படுத்த மாட்டார். சேரில் அமர்ந்து கொண்ட மற்றவர்களுடன் பேசுவார். ஜூனியர் ஆர்ட்டிஸ்களிடமும் சிறிந்த முகத்துடன் பேசி, அவர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிப்பார். பிரபலமான பாடலான நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம் என்ற பாடலில் உளத்தை போன்று எந்த உயரத்திற்கு சென்றாலும் மாறாமல் இருப்பார் நடிகர் அஜித் என்றார்.
இந்நிலையில், ஹிந்தி படமான பிங்க் ரீமேக்கில் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் தனது பகுதிகளை நடித்து கொண்டுது விட்டார். இந்த் படத்தில் அஜீத் வழக்கறிஞராக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் வித்யா பாலன், ஷர்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா டைராங் அபிராமி மற்றும் அதிக ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரீலிஸ் ஆக உள்ளது.