Sunday, June 4
Shadow

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

மூன்று படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்திற்கு விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளது படக்குழு.

பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்திருடன் நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். சமீபத்தில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட கெட்டப்பில் கலந்துக்கொண்டார் அஜித்.

அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஷாலினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ.