
தல ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தவறியது இதனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் சரி தல பொங்கல் என்று நினைத்தனர் அதிலும் தற்போது ஏமாற்ற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விஸ்வாசம் படகுழு படத்தை தள்ளிவைக்கலாமா என்று யோசித்து வருகிறது
அடுத்த ஆண்டு வெளியாக உள்ள படங்களில் முக்கிய படங்களாக கருதப்படுவது ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம். மல்டி ஸ்டார் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் என பேட்ட திரைப்படத்திற்கு பல விஷயங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் மதுரை பாஷை பேசும் அஜித், இரண்டு வேடங்களில் அஜித், சிவா-அஜித் கூட்டணி என ரசிகர்களும் விஸ்வாசத்தை கொண்டாட காரணங்கள் வைத்துள்ளனர்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு ஆயத்தமாகிவிட்டனர். விரைவாக இறுதிகட்ட வேலைகளை முடித்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய திட்டமிட்ட அஜித்தின் விஸ்வாசம் இழுத்துக் கொண்டு வந்து பொங்கலுக்கு ரிலீஸ் என நிற்கிறது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தி வரும் படக்குழு, அடுத்ததாக சில முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக மும்பை செல்கிறது. விரைவாக வேலைகளை முடித்து பொங்கலுக்கு ரிலீஸாகும் என நினைத்தால், அதில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
பேட்ட படமும் விஸ்வாசமும் ஒரே நாளில் ரிலீஸானால், இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், வசூலும் பாதிக்கும். அதனால் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என படக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் எந்தவித குழப்பமும் இல்லாமல் பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் அஜித் ரசிகர்கள் ‘தல’ பொங்கலுக்கு தயாராகலாம்.
