
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அரசு உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில நேரங்களிலே மீம்ஸ் வர ஆரம்பித்து விட்டது மாஸ்க் பண்ணிய புகை படம் என்று விஜய் ரசிகர்கள் தன் வேலையை ஆரம்பித்து விட்டனர் இருந்தும் இந்த ஃபர்ஸ்ட் லுக் விஜய் சாதனையை உடைத்து புதிய சாதனை உண்டுபண்ணியுள்ளது.
பைரவா முதல்நாளில் 10 ஆயிரம் RT வாங்கியது. ஆனால் விவேகம் தற்போதே 11 ஆயிரம் RT பெற்று சாதனை படைத்துள்ளது.
