
பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியாகியுள்ள புதிய படம் சாஹோ. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரபாஸ்க்கு, அதிகளவில் பெண் ரசிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் சிறப்பு வீடியோ, ஷாட்ஸ் ஆப் சாஹோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் ரசிகர்களை கவரும் பல அறிய மேக்கிங் படங்கள் இடம் பெற்றுள்ளது இந்த படத்தின் முதல் வீடியோ நாளை, அதாவது நடிகர் பிரபாஸ்சின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளது.
வசூல் மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை படைத்த பாகுபலி படத்தை தொடர்ந்து வருவதால், இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாஹோ, நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். இந்த படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சிறந்த நடிகர்களான ஜாக்கி ஷோரோப், நெலி நிதின் முக்கேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் முகர்ஜி, அருண் விஜய், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
UV கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள சாஹோ படம் ஆக்ஷன் திரில்லராக உருவாக்கி வருகிறது. இந்த படத்தை வம்சி, பிரோம்த், விக்ரம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்குகிறார். பல்வேறு நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த படத்திற்கு ஷங்கர்-இசான்-லாய் இசையமைக்க, அமிதாப் பட்டாச்சார்யா பாடல்களை எழுதியுள்ளார். போட்டோகிராப்பியை மதியும் எடிட்டிங் பணிகளை சேகர் பிரசாத் மற்றும் தயாரிப்பு டிசைன் பணிகளை சிபு சிறில் ஆகியோரும் செய்துள்ளனர்.
