தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு
இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்தி...





