Sunday, June 21
Shadow

தமிழ்நாட்டிற்கு பாய் பாய் சொன்ன நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி?

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

இந்த படத்திற்கு பிறகு மறுபடியும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தாண்டவம் படத்தில் நடித்தார்.பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பின்னர் முன்னணி இயக்குனர்களின் படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் கடைசியாக கெத்து,தெறி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் 2.o இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு பிறகு எமி ஜாக்சன் தமிழகத்திலே செட்டில் ஆகி விடுவார் என்று நினைத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவிற்கு குட் பை சொல்வது போல் ஒரு டிவிட் ஒன்றை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இந்த முடிவிற்கு காரணம் “super girl” என்ற சீரியலில் நடிப்பதற்காக அமெரிக்காவுக்கு பறந்துள்ளார் எமி ஜாக்சன். இதனால் தமிழ் படங்களில் நடிப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை கேட்டு எமி ஜாக்சன் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Leave a Reply