Thursday, January 21
Shadow

அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் என்ற இரண்டு பெர்பாமர்கள். அர்ஜுன் கெத்தாக நடிப்பவர், அவருக்கு இப்படத்தில் பயந்து ஓடி பதுங்கும், பயப்படும் கதாபாத்திரம். தனது பார்வை வாயிலாகவே மிரட்டுபவர் வினோத், அவருக்கு குருடன் கதாபாத்திரம். மனநல நிபுணராக குமார் நடராஜன் தனது பார்வை மற்றும் பேசும் தோணியில் மிரட்டி விடுகிறார். பூஜா ராமசந்திரன் எதற்கு படம் நெடுக என்று யோசிக்கும் நேரத்தில், இந்த மூவரையும் இணைப்பது அவரே.

நெட் பிலிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, இந்திய அளவில் ரீச் பெற்றுள்ள படம் அந்தகாரம். கூடிய விரைவில் உலகளவில் நல்ல பாராட்டை பெரும் இப்படம் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் விக்னராஜன் தனது படத்திற்கு non linear ஸ்டைல் தேர்தெடுத்துள்ளார். இவருக்கு ஒருபுறம் உறுதுணையாக இருப்பது நடிகர்கள் எனில் மறுபுறம் எட்வின் சாகி ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங். இவர்கள் கூட்டணி செம்ம ஸ்ட்ராங்கான டெக்கினிக்கல் காம்போ. இதுவே இந்த சிக்கலான படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்.

எது நிகழ்காலம், எது முன்பு நடந்தது என புரிந்து கொள்வதே சாமானிய ரசிகனுக்கு சிரமம். 8 மாதம் என பல இடங்களில் குறிப்பிட்டாலும், நிகழ்வின் மாதம், ஆண்டு என சப் டைட்டில் போட்ருக்கலாம். திரை அரங்கில் ரிலீஸ் ஆகியிருந்தால், அவ்வாறு இருந்திருக்கும். நெட் பிலிக்ஸ் பிளாட்பார்ம் எனவே பார்வையாளரின் கற்பனைக்கு என பல விஷயங்கள் உள்ளது.

திரில்லர், சயன்ஸ் பிக்ஷன், ஆத்மா, பேய், மாந்த்ரீகம் என பல விஷயங்களை ஒரே படத்தில் பார்க்க முடியும். 171 நிமிடம் ஓடும் நேரம் உள்ள படம். மிதமான வேகத்தில் தான் நகர்கிறது திரைக்கதை, எனினும் நமக்கு சலிப்பு தட்டவில்லை. கடைசி 20 நிமிடம் வரை சஸ்பென்ஸ் முடிச்சியை அவிழ்க்கவில்லை இயக்குனர். கதை அமைப்பும் சரி காட்சியமைப்பும்  நாம் ஊகிப்பதும் கடினமே. அந்தளவுக்கு நேர்த்தியாக எடுத்துள்ளனர்.

எந்த கதாபாத்திரத்திற்கு பெரிதாக விளக்கம் கொடுக்கவில்லை இயக்குனர், மூன்று வித்தியாசமான நபர்களை வைத்து மூன்று கதையா என்று யோசிக்கும் நேரத்தில் வித்தியாசமான திரைகதி மூலம் மிரட்டி இருக்கும் படம். ஒரு போன் தான் கதைகரு இதை வைத்து பாம் முழுக்க நம்மை கட்டி போட்டு உக்கரவைக்கிறார். பார்வையற்ற வினோத் அவருக்கு பாடம் சொல்லி தரும் பூஜா பூஜாவின் தம்பிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் இப்த மூவரை வைத்து கதையின் ஓட்டத்தை மிக சிறப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

இயக்குனர் ராதா மோகனின் உதவி இயக்குனர் தான் இந்த படத்தை விக்னராஜன் ராதா மோகன் உதவி இயக்குனர் படம் என்றா சொல்லும் அளவுக்கு ஒரு திரில்லர் கதையை கொடுத்துள்ளார் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்தின் பலம் என்று சொல்லணும்.

அர்ஜுன் தாஸ் படத்தின் பலம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இதில் நாயகன் சைக்கோவாக இல்லாமல் இருக்கும் ஹீரோவாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

அதேபோல படத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறார் பார்வையற்ற வாலிபராக வருகிறார் . நடிப்பில் நம்மை பிரமிக்க வைக்கிறார் அதே போல பூஜா ஆசியியராக வந்து மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். மனநல நிபுணராக குமார் நடராஜன் படத்தின் கதையை நகர்த்தி செல்லும் பாத்திரத்தில் மிரட்டியுள்ளார் என்று தான் சொல்லணும்.

சாமானிய ரசிகனுக்கு சற்றே சலிப்பை கொடுக்கும் இப்படம், உலக சினிமா ரசிங்கனுக்கு கட்டாயம் புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்த்தியை தரும். OTT தளத்திற்கு ஏற்ற படம். புரியாத பல இடங்கள் வரும் சமயத்தில் அழகாக ரிமோட் வைத்து முன், பின் என எளிது புரிந்துகொள்ள முடிகிறது.

CLOSE
CLOSE