அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5
அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் என்ற இரண்டு பெர்பாமர்கள். அர்ஜுன் கெத்தாக நடிப்பவர், அவருக்கு இப்படத்தில் பயந்து ஓடி பதுங்கும், பயப்படும் கதாபாத்திரம். தனது பார்வை வாயிலாகவே மிரட்டுபவர் வினோத், அவருக்கு குருடன் கதாபாத்திரம். மனநல நிபுணராக குமார் நடராஜன் தனது பார்வை மற்றும் பேசும் தோணியில் மிரட்டி விடுகிறார். பூஜா ராமசந்திரன் எதற்கு படம் நெடுக என்று யோசிக்கும் நேரத்தில், இந்த மூவரையும் இணைப்பது அவரே.
நெட் பிலிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, இந்திய அளவில் ரீச் பெற்றுள்ள படம் அந்தகாரம். கூடிய விரைவில் உலகளவில் நல்ல பாராட்டை பெரும் இப்படம் என்பதில் சந்தேகமில்லை.
இயக்குனர் விக்னராஜன் தனது படத்திற்கு non linear ஸ்டைல் தேர்தெடுத்துள்ளார். இவருக்கு ஒருபுறம் உறுதுணையாக இருப்பது நடிகர்கள் எனில் மறுபுறம் எட்வின் சாகி ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங். இவர்கள் கூ...
