Monday, October 26
Shadow

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் – அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியிருக்கிறது. நாடோடிகள் 2 படப்பிடிப்பு சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியுடனும் துவங்கிவிட்டதாக அஞ்சலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.