Wednesday, October 28
Shadow

தனுஷ் ஜோடியாகும் விஷால் நாயகி அணு இம்மானுவேல்

தமிழ் சினிமாவின் தற்போதைய சகலகலாவல்லவன் என்றால் அது தனுஷ் தான் என்று உறுதியாக சொல்லமுடியும் ஒரு நடிகனாக பாடகனாக கதையாசிரியர் பாடலாசிரியர் இயக்குனர் இப்படி பல அவதரான்கள் எடுத்து வெற்றியும் பெற்றவர்

பன்முகத் திறமைகள் கொண்ட தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் நடித்த இந்தப் படத்தில், ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர்.

பெரும்பாலானவர்களிடம் பாராட்டைப் பெற்றது ‘பவர் பாண்டி’. நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக ஜெயித்த தனுஷ், இயக்குநராகவும் வெற்றி பெற்றார். இந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்த தனுஷ், மறுபடியும் இயக்குநராகி இருக்கிறார்.

தன்னுடைய இரண்டாவது படத்தின் ஷூட்டிங்கை, கடந்த 6-ம் தேதி தொடங்கினார் தனுஷ். இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். மேலும், நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ், ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த அனு இம்மானுவேல் இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறாரா? என்ற விவரம் தெரியவில்லை. குற்றாலத்தில் தற்போது ஸ்ரீகாந்த், அதிதி ராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்.