தனுஷ் ஜோடியாகும் விஷால் நாயகி அணு இம்மானுவேல்
தமிழ் சினிமாவின் தற்போதைய சகலகலாவல்லவன் என்றால் அது தனுஷ் தான் என்று உறுதியாக சொல்லமுடியும் ஒரு நடிகனாக பாடகனாக கதையாசிரியர் பாடலாசிரியர் இயக்குனர் இப்படி பல அவதரான்கள் எடுத்து வெற்றியும் பெற்றவர்
பன்முகத் திறமைகள் கொண்ட தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் நடித்த இந்தப் படத்தில், ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர்.
பெரும்பாலானவர்களிடம் பாராட்டைப் பெற்றது ‘பவர் பாண்டி’. நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக ஜெயித்த தனுஷ், இயக்குநராகவும் வெற்றி பெற்றார். இந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் நடித்த தனுஷ், மறுபடியும் இயக்குநராகி இருக்கிறார்.
தன்னுடைய இரண்டாவது படத்தின் ஷூட்டிங்கை, கடந்த 6-ம் தேதி தொடங்கினார் தனுஷ். இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக ...