Wednesday, October 28
Shadow

இயக்குனர் சுந்தர் .C இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

தொடர் தோல்வியில் இருந்து சற்றே மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்த்டுத்து நடிக்கிறார் சிம்பு அந்த வகையில் மணிரத்தினத்தின் செக்கசிவந்த வானம் அதை தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்தது அதன் படபிடிப்பு நேற்று துவங்கியது

பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங், நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களுடன் சிம்பு நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படம், வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.