
சினிஷின் ‘பலூன்’ படத்திற்கு பிறகு ஜெய் கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’, பிச்சுமணியின் ‘ஜருகண்டி’, சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’, சுரேஷின் ‘நீயா 2’, சியாம் – பிரவீன் இணைந்து இயக்கும் ‘மாங்கல்யம் தந்துனானேனா’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘ஜருகண்டி’ படத்தை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்யம்’ எனும் மலையாள பட புகழ் ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் நடிக்கின்றனர். போபோ ஷஷி இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் குமார் – ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றனர், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.