ஜெய் பீம் திரைவிமர்சனம் (இந்திய சினிமாவின் பொக்கிஷம்) Rank 5/5
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வருகிறது அத்தனை படங்களுக்கும் இந்த படம் மிக பெரிய உதாரணம் தமிழ் சினிமாவுக்கும் மட்டும் இல்ல உலக சினிமாவுக்கு சாவல் கொடுக்கும் ஒரு படம் .
இந்திய நடிகர்களில் யாரும் செய்யாத ஒரு ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா மிக தைரியமாக செய்துள்ளார். இப்படி ஒரு கதையை கேட்டு அதை சொந்த செலவில் தயாரித்து அதயும் மிக சிறந்த நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்து இருப்பது நமக்கு பெருமையான விஷயம். நம் தமிழ் சினிமாவுக்கு சூர்யா ஒரு பொக்கிஷம் அகரம் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் சூர்யா இந்த படம் மூலம் குறிப்பிட்ட சமுகத்து மிக பெரிய அந்தஸ்தை உண்டுபன்னியுள்ளார் .
இயக்குனர் தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார். இவர் ஆனந்த விகடன் பத்திரிக்கையாளர். இவர் தான் இந்த உண்மை சம்பத்தை கதைக்கலாமாக்கி படமா உருவாக்கியவர். ஐவரும் இந்த சினிமாவுக்கு மிக பெரிய பொக...