Sunday, June 21
Shadow

ரிலீசிலிருந்து தள்ளிச் செல்கிறது விஜய்யின் ‘கரு’!

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்க உருவாகியுள்ளது ‘கரு’. இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழுக்கு வருகிறார் சாய் பல்லவி.

இப்படத்தினை லை புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கருக்கலைப்பினை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அந்த தேதியில் ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் ’கரு’ படம் பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நாக சௌரியா, வெரோனிகா அரோரா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Leave a Reply